Loading...
 

கிளப் உருவாக்கம் - கிளப்பை வரையறுத்தல்

 

வாருங்கள் தொடங்கலாம்!

கிளப் பெயரை முடிவு செய்திடுங்கள்.


அலுவல் ரீதியாக பெயர் வைக்கும் விதிகள் மற்றும் வரையறைகளுக்கு இணங்கும் பட்சத்தில், உங்கள் கிளப்பிற்கு நீங்கள் விரும்புகிறவாறு பெயர் வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் கிளப்பின் பெயரில் "Agora" என்கிற வார்த்தையை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்கள் கிளப்பின் பெயர் "பாரிஸின் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள்" என்றுக்கூட இருக்கலாம்.

கிளப் லோகோ

பல மெட்டீரியல்கள் (பேட்ஜ்கள், சான்றிதழ்கள், மதிப்பீட்டு படிவங்கள் போன்றவை) உருவாக்கப்பட்ட விதத்தாலும், கிளப்புகள் உருவாக்கும் மெட்டீரியல்கள் மற்றும் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மெட்டீரியல்கள் இடையே ஏற்படும் குழப்பத்தைத் தடுக்கவும், அனைத்து கிளப்புகளும் தனக்கென்ற லோகோவினை கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன:

  • பிராண்ட் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் விதமாக, கிளப்பின் லோகோவை நீங்கள் சொந்தமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
  • கிளப்பை நீங்கள் பதிவுசெய்யும்போது Agora உடைய சதுர வடிவ லோகோ மற்றும் கிளப் பெயர் இடம்பெறும் நிலையான வடிவமைப்பின் அடிப்படையில்,  நாங்கள் உங்களுக்கான ஒரு லோகோவை தானாக உருவாக்க முடியும்.
    உதாரணமாக, உங்கள் கிளப்பின் பெயர் "Amman Speakers" என்று வைத்துக்கொள்வோம், நாங்கள் உங்களுக்கு வழங்கும் லோகோக்கள் பின்வருவதை போலவே இருக்கும் (நாங்கள் அவற்றை மிக உயர்ந்த தெளிவுத்திறனில் வழங்குவோம் என்பதைத் தவிர).

Logo 1

Logo 2

 

நாங்கள் தானாக உருவாக்கித் தரும் லோகோவுடன் நீங்கள் தொடங்கலாம், கிளப் செயல்படத் தொடங்கியதும் அதனை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் கிளப்பின் தன்மைகளை தீர்மானியுங்கள்.

அடுத்து, கிளப்பின் சில முக்கிய தன்மைகளை தீர்மானிப்பதன் மூலம் நீங்கள் அதனை "கட்டமைக்க" வேண்டும். கிளப் செயல்படத் தொடங்கியதும் கிட்டத்தட்ட அனைத்தையும் நீங்கள் அனைத்தையும் மாற்றிக் கொள்ளலாம், எனவே இந்தக் கட்டத்துடன் நின்றுவிட வேண்டாம்.

 

கிளப்பின் வகை

Agora பல்வேறு வகையான கிளப்புகளைக் கொண்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகள், தேவைகள் மற்றும் கட்டணங்களைக் கொண்டுள்ளன. கிளப்பின் மிகவும் அடிப்படை வகை பொது கிளப் ஆகும், இதில் யார் வேண்டுமென்றாலும் உறுப்பினர் ஆகலாம், நாங்கள் பரிந்துரைப்பதும் இதுதான். பொது கிளப்புகள் முற்றிலும் இலவசமானது, இதில் எந்த விதமான கட்டணத்தையும் Agora Speakers International -க்கு செலுத்த தேவையில்லை.

ஆன்லைன் சந்திப்புகள் அல்லது நேரடி சந்திப்புகள்?

கிளப் ஆனது நேரடியாகவோ, ஆன்லைனில் மூலம் மட்டுமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ சந்திப்பை மேற்கொள்ளலாம்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், அடிக்கடி நேரடிலும், எப்போதாவது ஆன்லைன் வழியாகவும் சந்திப்பை மேற்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆன்லைன் சந்திப்புகள் உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்களை பங்கேற்க அனுமதிக்கின்றன, மேலும் புதிய நபர்களைச் சந்திப்பதற்கும், சில புதிய வெளிப்புறக் கருத்துக்கள் குறித்து அறிவதற்கும், வெவ்வேறு கலாச்சாரங்கள், யோசனைகள் மற்றும் மொழி உச்சரிப்புகள் குறித்து தெரிந்துக் கொள்வதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பாகும். கூடுதலாக, எப்போதாவது ஆன்லைன் சந்திப்பை நடத்துவது புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதை எளிதாக்குகிறது, ஏனெனில் ஆர்வமுள்ள நபர்கள் அதிக முயற்சி அல்லது அர்ப்பணிப்பு ஏதும் இல்லாமல் கிளப் குறித்து அறிந்துக் கொள்வதை இது எளிதாக்குகிறது.

நேரடியாக சந்திக்கும் கிளப்பில் மட்டுமே கல்வி அனுபவத்தை முழுமையாக பெற முடியும், எனவே இந்த விருப்பத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும், சில கல்வித் செயல்திட்டங்களை ஆன்லைன்  வாயிலாக நிறைவு செய்ய முடியாமல் இருக்கலாம் அல்லது அதனை நிறைவு செய்வதற்கு கூடுதல் தேவைகள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

2020 பெருந்தொற்று போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் நேரடி சந்திப்புகளை ஆன்லைன் சந்திப்புகளாக மாற்றிக் கொள்ளலாம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒரு டிரக்கைத் தள்ளுவதும், நகர்த்துவதும் சவாலான காரியம். இருப்பினும், அது நகரத் தொடங்கிவிட்டால், அதை அதே நிலையில் வைத்திருப்பது என்பது ஒப்பீட்டளவில் எளிதானது. 

கிளப்பும் அதே மாதிரிதான். அதற்கும் நிறைய உறழ்மை (செயலற்ற தன்மை) இருக்கிறது - கிளப்பை செழிப்பாகவும், வழக்கமான முறையில் சந்திப்பை மேற்கொள்ளக்கூடியதாகவும் உருவாக்குவதற்கு நிறைய முயற்சி தேவை. அடிக்கடி நேரடி சந்திப்பைக் கொண்டிருக்கும் கிளப்பை நீங்கள் நடத்தி வந்தால், ஏதேனும் விதிவிலக்கான சூழல்கள் ஏற்படும் பட்சத்தில், சந்திப்புகளை முற்றிலும் நிறுத்தி விடுவதை விட ஆன்லைன் வாயிலாக சந்திப்புகளை நடத்தி, வழக்கத்தை கடைப்பிடிப்பது சிறந்தது. பிறகு, சூழ்நிலைகள் சரியானதும், நீங்கள் நேரடி சந்திப்புக்கு திரும்பலாம்.

 

கிளப்பின் அதிகாரப்பூர்வ இடம்.

கிளப் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக செயல்பட்டாலும், அது ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது வட்டாரத்தைச் சேர்ந்தது என அமைப்பு ரீதியான நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட வேண்டும் - பெரும்பாலான ஃபவுண்டிங் உறுப்பினர்கள் வாழ்கின்ற இடமாக அது இருக்க வேண்டும்.

கிளப் பதிவுசெய்யப்பட்டவுடன் மாற்ற முடியாத மிகச் சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிரான்சில் உள்ள பாரிஸை சேர்ந்தது என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கிளப்பை பின்னர் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவை சேர்ந்தது என மாற்ற இயலாது.

 

சந்திப்பு அட்டவணை

வாரத்தின் எந்த நாட்களில் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள்? Agora Speakers கிளப்புகள் கோடை விடுமுறைகளைத் தவிர்த்து மாதத்திற்கு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி வேண்டுமானாலும் சந்திக்கலாம் - இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அல்லது வாரம் ஒரு முறை என்று கூட சந்திக்கலாம். சில கிளப்புகள் இன்னும் அடிக்கடி சந்திக்கின்றன - குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது! எது எப்படியிருந்தாலும், உங்கள் கிளப்பில் நன்கு வரையறுக்கப்பட்ட சந்திப்பு அட்டவணை இருந்தால் சிறப்பு.

வழக்கமானதாக இருந்தாலும், கிளப்புகள் மாதத்திற்கு இரண்டு முறை ("ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை" என்பது போன்று) சந்திக்கும் வகையில் தேர்வு செய்துக் கொள்ளலாம், உங்கள் கிளப் பொது கிளப்பாக இருந்தால், வாரந்தோறும் சந்திப்பு நடத்துவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமான காரியமாக இருக்கும், ஏனென்றால் மக்களுக்கு இதற்கென்று நேரம் செலவிடுவதற்கு ஆரம்பத்தில் சிக்கலாக இருக்கும். நீங்கள் 20 அல்லது 30 ஃபவுண்டிங் உறுப்பினர்களுடன் கிளப்பை தொடங்காவிட்டால், 4 அல்லது 5 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சந்திப்புகள் கூட இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை - ஒரு கிளப் தலைவராக, நீங்கள் இந்த வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டும்.

இருப்பினும், காலப்போக்கில் வாரத்திற்கு ஒரு முறை சந்திக்கும் கிளப் வேகமாக வளர்ச்சி அடையும், ஏனெனில் சேருவதற்கு சாத்தியமான விருந்தினர்களுக்கு இந்த வார அட்டவணை மிகவும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு புதன்கிழமையும் கிளப் சந்திக்கிறது என்று வைத்துக் கொள்வோம், எனவே புதன்கிழமை என்றாலே, அன்று ஒரு சந்திப்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறல்லாமல், கிளப் "ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில்" சந்தித்தால், எந்த புதன்கிழமை அடுத்த சந்திப்பு இருக்கப் போகிறது, மாதத்தின் ஐந்தாவது புதன்கிழமை என்ன நடக்கும், முதல் புதன்கிழமை விடுமுறை என்றால், பிறகு சந்திப்பானது அடுத்த புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்படுமா அல்லது அந்த சந்திப்பு ரத்து செய்யப்படுமா என்பன போன்ற விஷயங்களை காலெண்டரில் பார்க்க வேண்டியிருக்கும்.

வாராந்திர அட்டவணையில் கிளப் சந்திக்கும் என்று நீங்கள் முடிவு செய்தால், ஒவ்வொரு வாரமும் விருந்தினர்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது நல்லது.

 

சந்திப்பு நடைபெறும் வளாகம்

கிளப் நேரடியாக சந்தித்தால், சந்திப்பு நடைபெறுவதற்கான பொருத்தமான இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். சந்திப்பு நடைபெறும் வளாகம் பற்றி வரவிருக்கும் கட்டுரைகளில் பேசுவோம்.

கிளப்பில் பயன்படுத்தப்படும் மொழிகள்.

முன்பு குறிப்பிட்டபடி, Agora Speakers கிளப்புகளில் ஆங்கிலம் மட்டுமல்லாமல் உள்ளூர் மொழிகளையும் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். ஒரே மொழியை பயன்படுத்துகிற கிளப்பையோ அல்லது சந்திப்புகளில் மொழிகளை மாறி மாறி பயன்படுத்தும் கிளப்பையோ அல்லது ஒரே சந்திப்பில் தேர்வு செய்யப்பட்ட மொழிகளை பயன்படுத்த அனுமதிக்கும் கிளப்பையோ நீங்கள் நடத்தலாம்.

கிளப்பின் மொழியைத் தேர்வு செய்யும்போது, Agora உடைய கல்வி ரீதியான மெட்டீரியல்கள் அந்த மொழியில் கிடைக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். விக்கியில் மொழிகளைச் சேர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம், மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தன்னார்வ அடிப்படையிலானவை, எனவே உங்கள் கிளப் ஆதரிக்கப்படாத மொழியைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் மெட்டீரியல்களை மொழிபெயர்க்க உதவுவது குறித்து கருத்தில் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் அனைத்து மொழிகளையும் எல்லா உறுப்பினர்களும் புரிந்துக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், ஒவ்வொரு கிளப்பும் ஒரு மொழி மீது மட்டும் கவனம் செலுத்துவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம் (அது ஆங்கிலமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை). ஒரு கிளப் ஒரே அமர்வில் இரு மொழியின் கலவையை (ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என்று வைத்துக்கொள்வோம்) பயன்படுத்துகிறது என்றால், சில உறுப்பினர்களுக்கு அந்த அமர்வில் கூறப்படும் பாதி விஷயங்கள் புரியாமல் போகலாம், மேலும் அயலவர்கள் போன்று இருப்பார்கள். கூடுதலாக, பயன்படுத்தும் மொழி புரியாததால் பார்வையாளர்களின் ஒரு பகுதி அவரது சொற்பொழிவின் மீது கவனம் செலுத்தாமல் இருப்பதைக் காண்பதற்கும் பேச்சாளருக்கு சங்கடமாக இருக்கும்.

இத்தகைய சூழலில், கிளப்பானது சந்திப்புகளுக்கு இடையே இரண்டு மொழிகளையும் மாறி மாறி பயன்படுத்தும்போது, பொதுவாக என்ன நடக்கும் என்றால், உறுப்பினர்கள் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் மொழியில் வழங்கப்படும் அமர்வுக்குச் வருகை புரிவார்கள் - இவ்வாறு செய்வதன் மூலம் கிளப் இரண்டாக பிரியும்.

 

உறுப்பினர்களிடம் கிளப் கட்டணம் வசூலிக்கப்படும்.

பொது கிளப்புகளைத் திறக்க Agora எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது என்றாலும், உங்கள் கிளப் அதன் செயல்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள  உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம். நீங்கள் கட்டணம் வசூலித்தால், கிளப் நிதிகளுக்கான விதிகள் அனைத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

 

உறுப்பினர் அல்லாதவர்களின் பங்கேற்பு

உங்கள் கிளப்பிற்கு மூன்று வகையான உறுப்பினர் அல்லாதவர்கள் வருகை புரியலாம், மேலும் சந்திப்பில் நீங்கள் என்ன பாத்திரங்களை அவர்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

வதிவிடமற்ற உறுப்பினர் என்பவர் வேறு ஏதேனும் Agora Speakers கிளப்பின் உறுப்பினராக இருப்பவர் ஆவார். தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகளைத் தவிர இந்தச் சிறப்பு "விருந்தினர்களை" வேறு ஏதேனும் பாத்திரத்தை வகிக்க அனுமதிக்கலாம் என்று நீங்கள் தீர்மானிக்கலாம்.

ஏதேனும் Agora உறுப்பினர் ஏதேனும் Agora கிளப்பில் நடைபெறும் சந்திப்பில் எந்தவொரு பாத்திரத்தையும் வகிக்க கிளப்புகள் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வெறுமனே தங்கள் சொந்த கிளப்பின் உறுப்பினர்களுக்கு முன்னால் மட்டுமல்லாமல், பலவிதமான பார்வையாளர்களுக்கு முன்னால் பொது சொற்பொழிவாற்றுவது குறித்து பயிற்சி செய்யலாம் என்பதால் இது உறுப்பினர்களின் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

விருந்தினர் என்பவர், மறுபுறம், எந்தவொரு கிளப்பிலும் உறுப்பினர்களாக இல்லாத பொது மக்களில் ஒருவர், பெரும்பாலான நேரங்களில், கிளப் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள், ஆனால் அமைப்பு குறித்து ஆர்வமாக இருப்பவர்கள். அன்றைய நாளின் சிந்தனை அல்லது உடனடித் தலைப்புகளில் பங்கேற்பது போன்ற எளிய பாத்திரங்களை கொடுத்து பொதுவில் பேசும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கி அனுமதிப்பதை நாங்கள் விரும்புகிறோம்.

அமைப்பின் பிரதிநிதிகள். இவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அமைப்பை நிர்வகிக்கும் குழுக்களின் உறுப்பினர்களாகவும், Agora தூதர்களாகவும் இருப்பர். பங்கேற்பைப் பொறுத்தவரை, அவர்கள் ஏதேனும் வதிவிடமற்ற உறுப்பினரின் அதே பங்கேற்பு விதிகளுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பதவியின் பெயரை வைத்து அவர்களுக்கு சிறப்பு பங்கேற்பு உரிமைகள் எதுவும் இல்லை.

பொது கிளப்புகள் தங்கள் சந்திப்புகளில் விருந்தினர்களையும், வதிவிடமற்ற உறுப்பினர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், நேரடி சந்திப்பு நடத்தப்பட்டால், வளாகத்தின் இடவசதிகளை பொறுத்து மட்டில்.

கூடுதலாக, வழிகாட்டுதலுக்காகவும், Agora செயல்படும் விதத்தை பின்பற்றுவதை உறுதிசெய்யவும் அனைத்து கிளப்புகளும் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் Agora தூதர்களின் வருகைகளை ஏற்க வேண்டும்.

 

கிளப்பை தொடர்பு கொள்வதற்கான தகவல்

கிளப்பைத் தொடர்புகொள்வதற்கு இரண்டு மாற்று வழிகளை கிளப்புகள் வெளியிட வேண்டும், அவற்றில் ஒன்று மின்னஞ்சல் முகவரியோ அல்லது தொலைபேசி எண்ணோ இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் பொதுவில் வெளியிடப்படும்.

சரியான மற்றும் தவறான கலவைகளின் சில எடுத்துக்காட்டுகள் இதோ இங்கே

  • மின்னஞ்சல் முகவரி மற்றும் முகநூல்
  • தொலைபேசி எண் மற்றும் வலைத்தள முகவரி
  • தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
  • வலைத்தள முகவரி மற்றும் முகநூல்
  • இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல்
  • இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி எண்

கிளப்பின் சார்பாக தொடர்பு நபராக செயல்பட ஒரு குறிப்பிட்ட நபரை நீங்கள் நியமிக்க வேண்டும். ஒரு கிளப்பிற்கான இந்த தொடர்பு நபர் எந்த உறுப்பினராகவும் இருக்கலாம் (கிளப் அதிகாரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை). ஆர்வமுள்ள நபர்களின் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பு இவருக்கு உள்ளது.

சந்திப்புகளின் பதிவீடுகள்

சந்திப்புகள் பதிவீடு செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுமா என்பதும், இந்த நடைமுறையில் இருந்து விலக்களிக்குமாறு கோருவதற்கு தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளதா என்பதும் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். 

எந்த முடிவு எடுத்தாலும், அது கிளப்பின் தளங்கள், விளம்பர மெட்டீரியல்கள் மற்றும் நிகழ்ச்சி இடுகைகள் அனைத்திலும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து சந்திப்புகளும் பதிவீடு செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட வேண்டும் என்றும், செயல்பாடுகள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உறுப்பினர்கள் எவ்வாறு மேம்பட்டு வருகிறார்கள் என்பதை அறிவதற்கு அற்புதமான தடமாக அமையும், மேலும் கிளப்பில் புதிய உறுப்பினர்களை கவருவதற்கும் இது உதவியாக இருக்கும்.

மேற்கண்ட பரிந்துரையை கடைபிடிக்க ஒரு கிளப் முடிவு செய்துவிட்டால், சந்திப்பு ஏற்பாட்டாளர்/வசதியாளர், அல்லது சந்திப்பு தலைவர், அல்லது வீடியோ எடுப்பவர், அல்லது ஏதேனும் கிளப் அலுவலர்  சந்திப்பின் தொடக்கத்தில் (ஒவ்வொரு சந்திப்பின்போதும்) - பதிவேடு செய்ய துவங்குவதற்கு முன்பும் - முழு நிகழ்வும் பதிவு செய்யப்படும் என்று தெளிவாகக் கூறுவது அடிப்படையானதாகும். இவ்வாறு செய்வது முக்கியமானது, ஏனென்றால் சந்திப்பில் சில விருந்தினர்கள் அல்லது பார்வையாளர்கள் இது குறித்து அறியாதவர்களாக இருக்கலாம் (இருப்பினும், விருந்தினர்கள் இதற்கு உடன்படவில்லை என்றால், அவர்களின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்). Agora Speakers அனைத்து கிளப்புகளும் ஐரோப்பிய GDPR தனியுரிமை கட்டமைப்பிற்கு இணங்க வேண்டும் (கிளப் அமைந்திருக்கும் இடத்தின் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல்), அதாவது அறிவிப்பில் பின்வருபவை குறிப்பிடப்பட வேண்டும்:

  • சந்திப்பு பதிவு செய்யப்படும் என்றும்
  • பதிவின் நோக்கம் என்ன என்றும்
  • தகவல் எங்கே வெளியிடப்படும் என்றும்
  • விலக்கு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா (இல்லையா) மற்றும் அதை எவ்வாறு பெற வேண்டும் என்றும்.

உதாரணமாக, பின்வருபவை மாதிரி கூற்றாக இருக்கலாம்:

""அனைவருக்கும் வணக்கம், எல்லா சந்திப்புகளை போலவே, இந்த சந்திப்பும் புகைப்படம் எடுக்கப்பட்டு வீடியோடேப் செய்யப்படும் என்று நான் உங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். அனைத்து உறுப்பினர்களும் அவர்கள் அடையும் முன்னேற்றத்தைக் காண்பதற்காக நாங்கள் இதைச் செய்கிறோம், இதன்மூலம் நம் கிளப்புகளை மற்றவர்களுக்கு காண்பிக்க முடியும். வீடியோக்கள் கிளப்பின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்படும், மேலும் இணையத்தில் பெருமளவில் காணும் வகையில் இருக்கும். நமது சிறந்த வீடியோக்களையும் சொற்பொழிவுகளையும் Agora Speakers International -க்கு அனுப்புகிறோம். வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டால், வீடியோ பரப்பப்படுவதை நிறுத்த எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க.

துரதிர்ஷ்டவசமாக, வீடியோ திருத்தம் செய்வதென்பது மிகவும் நேரம் எடுக்கும் செயல்முறையாகும், எனவே தங்கள் சொற்பொழிவு பதிவு செய்யப்பட விரும்பாத எவரும் சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தெளிவாக கூறி விட வேண்டும், எனவே அவர்கள் பதிவீடை நிறுத்திவிடுவார்கள். பதிவு செய்த பிறகு நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால், உங்கள் சொந்த மென்கருவிகளைக் கொண்டு நீங்களேதான் வீடியோவை திருத்தி, சந்திப்பு நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் இறுதி வீடியோவை எங்களுக்கு வழங்குவதே உங்களுக்கு இருக்கும் ஒரே வழி.

மேலும், நீங்கள் செயலாற்றும் பாத்திரங்கள் வகித்தால் மட்டுமே இது பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. நீங்கள்  பார்வையாளர்களில் ஒருவராக இருந்தால், நாங்கள் உங்களை வீடியோவிலிருந்து அகற்ற முடியாது, எனவே எங்கள் பதிவில் நீங்கள் இருக்க விரும்பவில்லை என்றால், இப்போதே சந்திப்பிலிருந்து வெளியேறுவதுதான் ஒரே வழி. தங்கியிருக்கும் நபர்கள் தங்கள் இருப்பைப் பதிவுசெய்து பகிரங்கமாகப் பகிர்வதற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்வோம்."

 

"விலகாத கொள்கை" கொண்டிருப்பதில் எந்த வெட்கமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சேர விரும்பும் எவருக்கும் Agora மற்றும் கிளப் இருவரும் விலைமதிப்பற்ற சேவையை வழங்குகின்றன, கிட்டத்தட்ட இலவசமாக (அல்லது முற்றிலும் இலவசமாக, கிளப்பில் எந்த கட்டணமும் இல்லை என்றால்). இத்தகைய திறனை வளர்த்துக் கொள்வதற்கான தொழில்முறை படிப்புகள் பல ஆயிரம் டாலர்களுக்கு மேல் தொடங்குகின்றன.

 

கிளப்பில் பயன்படுத்தப்படும் ஒழுங்கு விதிகள்

வழக்கமாக நடைபெறும் கல்வி ரீதியான சந்திப்புகளைத் தவிர, உங்கள் கிளப் எப்போதாவது பல்வேறு வகையான சிக்கல்களுக்காக சந்திப்புகளை நடத்த வேண்டியிருக்கும்:

  • கிளப் நிதிகளின் பயன்பாடு
  • கிளப் அதிகாரிகளின் தேர்தல்
  • ஒழுங்குமுறை நடவடிக்கைகள்
  • இந்த பிரிவிலிருந்து கிளப்பின் ஏதேனும் அளவுருக்களை மாற்றுவது
  • ... ஆர்வமுள்ள பிற தலைப்புகள்

இந்த சந்திப்புகளின் போது வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான சில அம்சங்கள் அகோரா கிளப் உள்ளமைப்பில் குறியிடப்பட்டிருந்தாலும் (வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன மற்றும் பெரும்பான்மை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பது போன்றவை), சந்திப்புகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க விதிமுறைகளின் தொகுப்பை கிளப் தீர்மானிக்க வேண்டும்.

தேர்வு செய்ய சில விருப்பங்கள் இதோ இங்கே:

இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை தாண்டி உங்கள் கிளப் வேறுபட்ட விதிகளைத் தேர்வுசெய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளின் தொகுப்பு பின்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க:

  • அனைத்து கிளப் உறுப்பினர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
  • செயல்பாடுகளை முன்வைப்பது, ஆதரிப்பது, எதிர்ப்பது மற்றும் திரும்பப் பெறுப்பது ஆகியவற்றுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
  • மிரட்டல் அல்லது கருத்து வேறுபாடு பயம் இல்லாமல் ஒழுங்கு முறையை பேணி நடைபெறும் சந்திப்புகளில் பங்கேற்க அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்பும் நேரமும் கொடுக்கப்பட வேண்டும்.

 

சொற்பொழிவில் பேசப்படும் விஷயங்களின் வகைகள்

நீங்கள் அமைக்க வேண்டிய கடைசி விஷயம், கிளப்பின் சொற்பொழிவுகளில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் விஷயங்கள். நீங்கள் இதனை வெளிப்படையாக அமைக்க விரும்பும் பல சூழல்கள் இருக்கலாம். உதாரணமாக, வரலாற்றுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிளப் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பலாம், அதில் வரலாற்று ரீதியான விஷயங்களைப் பற்றிய சொற்பொழிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மாற்றாக, விற்பனை செய்வது குறித்து பயிற்சி செய்வதற்கான பிரத்தியேக கிளப் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பலாம். சொற்பொழிவுகளில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் விஷயங்களின் வகைகளை நீங்கள் மட்டுப்படுத்த விரும்பினால், அதை நிர்வகிக்கும் விதிகள் குறித்த குறிப்பிட்ட கட்டுரையைப் படித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

சட்ட ரீதியாக பதிவு செய்வது

மாநிலத்தின் இலாப நோக்கற்ற பதிவேட்டில் உங்கள் கிளப்பை சட்டப்பூர்வமாக பதிவுசெய்வதை நீங்கள் தொடர விரும்புகிறீர்களா என்பதே கிளப் ஆரம்பிப்பது தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய இறுதி முடிவாகும். இது வழக்கமாக ஒரு சிக்கலான செயல்முறையாகும், இதனை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, மேலும் முழு கிளப் உருவாகும் நடைமுறையையும் இது தடம் புரட்டக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, உங்கள் கிளப்புக்கு இது அவசியமா, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த குறிப்பிட்ட தகவலை எங்களால் வழங்க இயலாது - உங்கள் உள்ளூர் அதிகார வரம்பில் ஒரு நிபுணரை நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். பொதுவாக கூற வேண்டுமென்றால், எங்களால் மூன்று பரிந்துரைகளை வழங்க இயலும் (இதனை சட்ட ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது): 

  • சட்டம் அனுமதித்தால், சட்ட ரீதியாக பதிவு செய்யும் செயல்முறையை முயற்சிக்கும் முன் கிளப்பை நல்ல முறையில் முன்னேற்றிக் கொண்டு வந்து அது நல்ல முறையில் இயங்குவதை உறுதிப்படுத்த முயற்சிக்கவும்.
  • நாங்கள் கிளப்புகளை "தனியார் படிப்பு குழுக்களுக்கு" சமமானதாக கருதுகிறோம் - அதாவது சில திறன்கள் குறித்து கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் அவ்வப்போது சந்திக்கும் ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவாகவே நாங்கள் இதனை கருதுகிறோம், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் தேர்வுக்கு முன் அந்தப் பாடத்தைப் படித்து, பயிற்சி செய்வதற்கு பள்ளி வகுப்பில் சந்திக்கும் விதமாகவே நாங்கள் இதனையும் கிட்டத்தட்ட கருதுகிறோம். இந்தச் சந்திப்புகளில் சில உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய செலவுகளைக் (படிப்பதற்கான அறையை வாடகைக்கு எடுப்பது போன்று) கொண்டிருக்கக்கூடும். உங்கள் உள்ளூர் அதிகார வரம்புக்கு அத்தகைய குழு சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டறிந்துக் கொள்ளவும்.
  • ஒவ்வொரு கிளப்பும் Agora Speakers International Foundation அமைப்பின் சுயாதீனமான கிளப்பாக செயல்படுகின்றன. எனவே, மேற்கொள்ளப்படும் எந்தவொரு பதிவும் உள்ளூர் சுயாதீன அமைப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும், ஆனால் வெளிநாட்டு அமைப்பின் ஏதேனும் "கிளையாகவோ", "பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவோ" அல்லது "அதன் பகுதியாகவோ" பதிவு செய்யப்படக் கூடாது.
பொது கிளப்புகள், PIC-க்கள் மற்றும் நிபந்தனைகள் உடைய கிளப்புகள் இலாப நோக்கமுடைய அமைப்புகளாக பதிவு செய்யாமல் இருக்கலாம். அவர்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யும் செயல்முறையை தொடர விரும்பினால், அது கண்டிப்பாக லாப நோக்கற்ற அமைப்பாகவே இருக்க வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில், சட்ட ரீதியாக பதிவு செய்வதென்பது சில சிவில் பொறுப்புக் காப்பீட்டை வாங்குவதைக் குறிக்கும் என்பதையும் நினைவில் கொள்க. மீண்டும், இது விஷயத்தில் ஏதேனும் வகையில் தகவல்களை வழங்கவோ அல்லது உதவவோ எங்களால் இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்- உள்ளூர் சட்ட நிபுணரை அணுகவும்.

 

எடுத்த முடிவை மறந்துவிட்டீர்களா?


எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் பதிவுசெய்து, நீங்கள் எதையும் தவறவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த எங்களது உடைமை உருவாக்கும் மென்கருவியின் இந்த எளிய படிவத்தைப் பயன்படுத்தவும்.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:37 CET by agora.